குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை இராணுவத்தின் தொழில்வான்மை மேலோங்கியுள்ளதாக ஒய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அட்மிரால் வில்லியம் ஜே. போலன் ( William J. Fallon ) தெரிவித்துள்ளார். இறுதியில் இலங்கை இராணுவத்தினர் தொழில்சார் தன்மையுடன் செயற்படத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்று விசேட உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கை உலகிற்கு முன்னுதாரணமாக திகழ்கின்றது என சுட்டிக்காட்டியுள்ள அவர் மக்கள் சமாதானமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய பின்னணி உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் பல்வேறு கருமங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் கருத்திற் கொண்டு மக்களுக்கு சிறந்த தீர்வுத்திட்டத்தை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு கூட்டு முயற்சி மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.