உத்தரபிரதேசத்தில் ‘புளூவேல்’ இணையத்தள விளையாட்டில் விளையாடிய 13 வயது சிறுவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு தூண்டும் புளூவேல் இணையத்தள விளையாட்டில ஈடுபட்டு உலகம் முழுவதும் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, நீலத் திமிங்கிலம் போன்ற அபாயகரமான தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டுக்களை நீக்குமாறு சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், புளூவேல் விளையாட்டில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தினைச் சேர்ந்த பார்த் சிங் என்ற 13 வயது சிறுவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை கொல்கத்தாவில் தனியார் பொறியியல்; கல்லூரியில் கற்று வந்த மாணவர் ஒருவரரும் இந்த விளையாட்டுக்கு அடிமையாகி ஆபத்தான நிலையில் இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.