ஏதிர்வரும் செப்டம்பர் 9ம் திகதி வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளது என தென்கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா அண்மையில் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இந்தநிலையிலேயே ஏதிர்வரும் 9ம் திகதி மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் வடகொரியா செய்துள்ளது என்று தென்கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உளவுத் துறை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன எனவும் செயற்கைக்கோள் மூலமாக வடகொரியாவின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கொரிய தீபகற்பத்தில் போர் மூழும் ஒரு நிலை ஏற்பட்டுள்ள நிலையில் வடகொரியாவின் முப்படைகள் தீவிர போர் ஒத்திகையிலும் ஈடுபட்டு வருகின்றன எனவும் இந்த போர் பயிற்சிகளை அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது