Home இலங்கை மியன்மாரில் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உலக நாடுகள் அடைக்கலம் கொடுக்க வேண்டும்

மியன்மாரில் இனச்சுத்திகரிப்புக்குள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உலக நாடுகள் அடைக்கலம் கொடுக்க வேண்டும்

by admin


மியன்மாரில் சித்திரவதைகளுக்கும் இனச்சுத்திகரிப்புக்கும் உள்ளாகிவரும் ரோஹிங்யா முஸ்லிம்கங்களுக்கு  அடைக்கலம் கொடுக்க இலங்கை உட்பட உலக நாடுகள் முன்வர வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்

பாரிய மனித உரிமை மீறல்களும் சின்னஞ்சிறு பாலகர்கள் முதல் கர்ப்பணித் தாய்மார் வரை பாரபட்சமின்றி கொன்று குவித்து வரும் மியன்மார் அரசு  தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு அழுத்தம் கொடுக்க  வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளர்h.

தற்போது  ரோஹிங்யா முஸ்லிங்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ்  நசீர் அஹமட் இதனைக் கூறினார்,

ரோஹிங்யா முஸ்லிங்கள் மீதான வன்முறைகள் கடந்த இரண்டு   ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போதிலும் இதுவரை உலக நாடுகள் பாரியளவில் எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்,

இந்த நூற்றாண்டின் பாரிய இனச் சுத்திகரிப்பில் ஒன்றாக கருதப்படும் ரோஹிங்யாக முஸ்லிங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகள் குறித்து தொடர்ந்தும் உலக நாடுகள் மௌனம் சாதிப்பதும் மென்மையான கடைபிடிப்பதும் மனித குல அழிவுக்கு துணை போவதற்கு சமம் என்பதை நாம் புரிந்து  கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின்  போது  உலக நாடுகள்  தமது  சுய அரசியல் இலாபம் கருதி கடைபிடித்த  பல்வேறு  கொள்கைகள் காரணமாகவே   ஆயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.

எனவே  இதே  தவறை  மியன்மார்  விவகாரத்தில்  உலக நாடுகள்  விட்டு விடக் கூடாது.   கனடா ,நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மத்திய கிழக்கு நாடுகளும் இந்த மக்களுக்கு அடைக்கலம் வழங்க முன்வரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More