குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப் பொருள் கடத்தலை தடுக்க பிராந்திய வலய நாடுகளுடன் இலங்கை இணைந்து செயற்படுவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை தந்திரோபாய ரீதியில் முக்கியமான நிலையில் அமைந்துள்ள காரணத்தினால், இலங்கையை மையமாகக் கொண்டு போதைப் பொருள் கடத்தல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் நிதி திரட்டும் நோக்கில் போதைப் பொருள் கடத்தியதாகவும் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இலங்கை போதைப் பொருள் கடத்துவதற்கான ஓர் மையமாக காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய வலயத்திலும் இலங்கையிலும் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.