குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த தனது திட்டம் குறித்த பல கேள்விகளிற்கு பிரித்தானியா உரிய பதிலை வழங்கவி;ல்லை என ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜீன் குளோட் ஜங்கர் பிரித்தானியா மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து தெரேசாமே அரசாங்கம் தயாரித்துள்ள ஆவணங்கள் எவற்றிலும் ஐரோப்பிய ஓன்றியம் எதிர்பார்க்கும் பதில்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா வெளியிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அறிக்கைகளையும் உன்னிப்பாக ஆராய்ந்தேன் எனவும் ஆனால் அவை எவையும் தனக்கு திருப்தியளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரசல்ஸில் நடைபெறும் ஐரோப்பிய ஓன்றிய பிரதிநிதிகளின் வருடாந்த கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக பிரித்தானியா பதிலளிக்கவேண்டிய பெருமளவு கேள்விகள் உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளினதும் ஐரோப்பிய ஓன்றிய நாடுகளில் உள்ள பிரித்தானியா பிரஜைகளினதும் உரிமைகள் குறித்து பிரித்தானியா பதில்களை வழங்கவேண்டியுள்ளது என்றும்; அவர் தெரிவித்துள்ளார்.
இந்த கேள்விகள் அனைத்திற்கும் உரிய பதில் கிடைக்கும்வரை ஐக்கிய இராச்சியத்திற்கும் ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையிலான புதிய வர்த்தக பொருளாதார உறவுகள் குறித்த பேச்சுக்களை ஆரம்பிக்கப்போவதில்லை என்பதே எங்களின் மிகத்தெளிவான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்