குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள சீனப் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களினால் மானுடத்திற்கும் சமூக விழுமியங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சீன உயர் படையதிகாரி கேணல் குயோ ஸின்னிங் ( Guo Xinning)தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமாதானம், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டிய அவசியம் வெகுவாக எழுந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் உலக சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு மிகவும் இன்றியமையாதது என அவர் தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் சர்வதேச சமூகத்தின் பொது எதிரியாக உருவாகியுள்ளதாகவும் கடும்போக்குவாத வன்முறைகள் எந்தவொரு மதத்தையோ அல்லது இன சமூகத்தையோ பிரதிநிதித்துவம் செய்யவில்லை எனவும், அவை அனைத்துமே பயங்கரவாதத்தையே பிரதிநிதித்துவம் செய்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடும்போக்குவாதம் நாளுக்கு நாள் பல்வேறு வழிகளில் தலைதூக்குவதாகத் தெரிவித்துள்ளார்.