Home இந்தியாமும்பையில் பெய்த கனமழை 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்:-

மும்பையில் பெய்த கனமழை 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்:-

by admin

மும்பையில் நேற்றையதினம் பெய்த கனமழை காரணமாக 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் தானேவில் மழை காரணமாக 2 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இருவர் காயமடைந்ததுள்ளதாகவும் இன்றும் கனமழை தொடரும் என்பதால் மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புகையிரதம் மற்றும் பேருந்து, வாகன போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்டுகின்றது. இந்தநிலையில் இன்றையதினகும் அங்கு பாடசாலைகள் கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மின்சார துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட மிகவும் முக்கிய துறைகளில் பணியாற்றுவோர் தவிர்ந்த ஏனையவர்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More