பஞ்சாப் மற்றும் ஐம்மு காஷ்மீரில் பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி, அங்குள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று இந்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதியிலிருந்து 24ம் திகதிவரையான காலப்பகுதியில் 15க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் எனவும் அவர்களில் 8 பேர் பஞ்சாப் மற்றும் ஐம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ளனர் எனவும் அவர்கள் அங்குள்ள ராணுவ முகாம்கள் மற்றும் காவல்நிலையங்கள் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் எனவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்ற பெரிய அளவில் தாக்குதல் மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ளன எனவும் இதனால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காஷ்மீர், பஞ்சாப் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது