193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று ஆரம்பமாகி யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள் , சிவில் சமூகங்கள் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் யாழ்.நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து அங்கிருந்து கோவில் வீதி வழியாக யாழ்.ஐநா அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரசிடம் கையளிப்பதற்கு மகஜர் கையளிக்கப்பட்டது.
Spread the love