Home இலங்கைகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதற்காக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் ஐநா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதற்காக மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று யாழ்.நல்லூர் ஆலய முன்றலில் இருந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்று ஆரம்பமாகி யாழில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறவுகள்  ,  சிவில் சமூகங்கள் உள்ளிட்டோரின் ஏற்பாட்டில் யாழ்.நல்லூர் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அங்கிருந்து கோவில் வீதி வழியாக யாழ்.ஐநா அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரசிடம் கையளிப்பதற்கு மகஜர் கையளிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More