குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றச்செயல்களால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் பிரித்தானியாவின் சிறுவர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதாக சில்ரன் சொசைட்டி என்ற சமூக அமைப்பு தெரிவித்துள்ளது. பத்து முதல் 17 வரையிலான பிரித்தானிய சிறுவர்கள் குற்றச்செயல்கள் குறித்து அதிகம் கவலைகொண்டுள்ளனர் குறிப்பாக திருட்டு , அறிமுகம் அற்ற நபரால் பின்தொடரப்படுதல் தாக்கப்படுதல் போன்றவை குறித்து அவர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
சுமார் 3000 சிறுவர்கள் மத்தியிலான கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேயே இந்த தகவலை வெளியிட்டுள்ள சில்ரன் சொசைட்டி சிறுவர்களின் ஓட்டுமொத்த மகிழ்ச்சி வீதம் குறைவடைந்து வருவதாக தெரிவித்துள்ளது
அரசாங்கம் சிறுவர்கள் விவகாரத்திற்காக அதிகளவு நிதியை ஓதுக்கவேண்டும் என்;றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பெற்றோர்களின் கடன் மற்றும் வருமானத்திற்கான போராட்டம் ஆகியன காரணமாகவும் சிறுவர்களின் மகிழ்ச்சி குறைவடைவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது
கடந்த ஓருவருட காலப்பகுதியில் தாங்கள் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக 17 வீதமான சிறுவர்கள் தெரிவித்துள்ளனர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பதின்ம வயது சிறுமிகள் மற்றும் யுவதிகளில் மூன்றில் ஒருவர் யாராவது அறிமுகம் அற்றவர்கள் தங்களை பின்தொடரலாம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை நான்கில் ஓரு சிறுவன் மத்தியில் தாக்கப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
24 வீதமானவர்கள் திருட்டு குறித்த அச்சத்தையும்,20 வீதமானவர்கள் வன்முறையை பயன்படுத்தி மிரட்டப்படலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.