Home உலகம்இணைப்பு2 – வெடிகுண்டை செயலழிக்க செய்யும் பொருட்டு பிராங்க்பேர்ட்டிலிருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

இணைப்பு2 – வெடிகுண்டை செயலழிக்க செய்யும் பொருட்டு பிராங்க்பேர்ட்டிலிருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

by admin

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட    சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம்   செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும்  அதன்பொருட்டு  பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள்    தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப் படையினரால் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிராங்க்பேர்ட் நகரில் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர்:-

Aug 31, 2017 @ 21:04

ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிராங்க்பேர்ட் நகரில் இரண்டாம் உலகப் போரில் போடப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சக்தி வாய்ந்த குண்டு புதைந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சுறுத்தல் காணப்படுவதனால் அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

புளொக்பஸ்ரர் ( (blockbuster ) என ஜெர்மனி அதிகாரிகளால் பெயரிடப்பட அந்தக்குண்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செயல் இழக்க செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் அன்றையதினம் குறித்த மக்கள் வெளியேற்றப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More