குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கடச்pயை பிளவடையச் செய்ய முடியாது என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கட்சியை பிளவடையச் செய்ய நினைப்பது வெறும் கனவு மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ள அவர் கட்சியை பிளவடையச் செய்ய நினைத்தவர்கள் மற்றும் முயற்சித்தவர்கள் இன்று போலவே கடந்த காலங்களிலும் இருந்தார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு முயற்சித்த பலர் மீளவும் கட்சியின் உதவியை நாட நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியை பிளவடையச் செய்ய முயற்சிப்போருக்கு இறுதியில் கட்சியின் முன்வரிசை ஆசனங்கள் கிடைக்காமல் போகும் என அவர் தெரிவித்துள்ளார்
Spread the love
Add Comment