வேதா இல்லத்தை நினைவிடமாக்குவதில் தமிழக அரசு தீவரமாக உள்ள நிலையில் தினகரன் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பில் நீதிமன்றங்களில் நடைபெற்ற வழக்குகளில் சசிகலா, இளவரசி ஆகியோரின் முகவரியும் வேதா இல்லம் என காணப்படுவதாகவும் அவர்கள் சிறையில் உள்ள நிலையில் வேதா இல்லத்தை அரசுடைமை ஆக்க முடியாது எனவும் தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் திருச்சியைச் சேர்ந்த பொறியாளர் தங்கவேலு என்பவர் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகவும் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி எனவும் எனவே ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக்குவது சட்டவிரோதமானது எனவும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரத்து செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.