சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ஆட்டமிழக்காது ( not out ) இருந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் டோனி படைத்துள்ளார். 36 வயதான டோனி நேற்றையதினம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியின் போது 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனைக்கு டோனி சொந்தக்காரர் ஆகியுள்ளார்.
அவர் இதுவரை 73 ஆட்டங்களில் ஆட்டமிழக்காது இருந்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணியின் சமிந்த வாஸ், தென்ஆப்பிரிக்காவின் ஷான் பொலக் ஆகியோர் தலா 72 முறை ஆட்டமிழக்காது இருந்தமை சாதனையாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment