குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்தமாதம் ஆரம்பத்தில் பொலிசாரால் ஆரம்பிக்கப்பட்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் ஒருமாதத்தை எட்டிய நிலையில் குறித்த நிகழ்ச்சித்திட்டம் முடியும் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் முல்லைத்தீவு மாங்குளம் பொலிசாரால் திருமுருகண்டிப் பகுதியில் நடத்தப்பட்ட நடமாடும் சேவை இன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
குறித்த கிராமத்தில் இருந்து வெளியேறும் முகமாக நிகழ்வொன்றும் மாங்குளம் பொலிசாரால் திருமுருகண்டிப் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெளிகன்ன சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அத்துடன் அக்கிராமத்தை சேர்ந்த முன்னூறு பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்ததுடன் ஐம்பது கர்ப்பவதிகளுக்கு சத்துணவுப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.
இதே போன்று கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதியில் நடத்தப்பட்ட நடமாடும் சேவைகள் முடிவுக்கு வருவதுடன் குறித்த பகுதியில் இருந்து வெளியேறும் முகமாக பொலிசாரால் இசை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளையும் பொலிசார் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது