குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவின் மன்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரி சல்மான் அபேடியின் சகோதரர் ஹசேம் அபேடியை லிபியா நீதிமன்றம் குறிப்பிட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யவுள்ளது.
மே மாதம் மான்செஸ்டரில் இடம்பெற்ற குண்டுதாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து லிபியாவில் ஹசேம் அபேடி உடனடியாக கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மான்செஸ்டர் தற்கொலை குண்டுதாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிபியாவின் தலைமை விசாரணையாளர் அபேடி தனது சகோதரரிற்கு உதவியிருக்கலாம எனவும் அவரிற்கு வெடிமருந்துகள் கிடைப்பதற்கு உதவி வழங்கியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அபேடி சகோதரர்களின் தந்தையும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை திரிபோலியில் ஹசேம் அபேடியை பிரித்தானிய காவல்துறையினர் விசாரணை செய்யவில்லை என பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர் ஓரு சந்தேகநபர் எனவும் அவர் இங்கிருந்துதால் அவரை நிச்சயம் கைதுசெய்திருப்போம் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.