குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் விசேட படைப்பிரிவை பிலிப்பைன்ஸிற்கு அனுப்புவது குறித்த பேச்சுக்களிற்காக பாதுகாப்பு அமைச்சர் மரைஸ் பெயன் அடுத்தவாரம் பிலிப்பைன்ஸிற்கு பயணம்; மேற்கொள்ளவுள்ளார்,
இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிற்காக பாதுகாப்பு அமைச்சர் பிலிப்பைன்ஸ் செல்லவுள்ளதை அவரது அலுவலகம் உறுதிசெய்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிலிப்பைன்ஸ் இராணுவத்திற்கு அவுஸ்திரேலியா வேவு விமானங்கள் வழங்கி ஏற்கனவே உதவி செய்து வருகின்ற நிலையிலேயே அவுஸ்திரேலிய விசேட படையினர் அங்கு செல்லவுள்ளனர்.
எனினும் அவர்கள் மோதலில் ஈடுபடமாட்டார்கள் எனவும் ஆதரவு மற்றும் ஆலோசனையை வழங்குவதில் ஈடுபடுவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.