குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உயர்தரப் பரீட்சையில் மோசடியில் ஈடுபட்ட மாணவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட அதி நவீன கருவிகளைக் கொண்டு உயர்தரப் பரீட்சை மோசடியில் ஈடுபட்ட மாணவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு பரீட்சையிலும் குறித்த மாணவர் தோற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையில் இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்தும் மாணவ மாணவியருக்கு ஐந்து ஆண்டுகள் பரீட்சையில் தோற்ற தடை விதிப்பதே வழமையான தண்டனையாகும்.
எனினும் குறித்த மாணவரின் குற்றத்தின் தண்டனையின் அடிப்படையில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Add Comment