2017 ஆம் ஆண்டின் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் Iwao Horii நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.
ஜப்பானின் நட்பு நாடு என்ற வகையில் இலங்கையின் அபிவிருத்திக்காக ஜப்பான் வழங்கும் பங்களிப்பினை பாராட்டிய ஜனாதிபதி மறைமுக குறிக்கோள் ஏதுமின்றி உண்மையான நட்பு நாடாக ஜப்பான் வழங்கும் இதயபூர்வமான உதவிக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இதன்போது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பெற்றுக்கொள்வதற்கும், அபிவிருத்திக்குமான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜப்பானின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கைக்கு வழங்கப்படும் JAICA நிவாரணங்களை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், அண்மையில் மீண்டும் ஜப்பானிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜப்பானின் பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது அழைப்பு விடுத்தார்.