318
குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இனம் காணப்படாத போதைப் பொருள் வகையொன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர். பண்டாரகம விதாகம பிரதசத்தில் வைத்து இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. பாணந்துறையிலிருந்து ஹொரணை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த சந்தேக நபரிடமிருந்து இனம் காணப்படாத 647 போதைப் பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளன.
24 வயதான குறித்த சந்தேக நபர் அங்குருவாதொட்ட என்னும் இடத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் இன்றைய தினம் ஹொரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
Spread the love