குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிரிக்கட் மைதானத்திற்கு அம்பு விட்டு போட்டியை நிறுத்திய நபரை பிரித்தானிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தது.
கடந்த 31ம் தெற்கு லண்டனில் அமைந்துள்ள ஒவல் மைதானத்தில் வில் மூலம் அம்புகளை விட்டெறிந்து போட்டியை தடுக்க முயற்சித்தார் என தெரிவிக்கப்படுகிறது. சர்ரே மற்றும் மிடில்செக்ஸ் கழகங்களுக்கு இடையிலான போட்டியிலேயே இவ்வாறு அம்பு விடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Spread the love
Add Comment