ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட அப்துல்லா உசேன் என்பவருக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மொசூல் நகரில் நடந்த சண்டையின்போது கைது செய்யப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான அப்துல்லா உசேன் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொசூல் அருகே அமைந்துள்ள நீதிமன்றில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியதில் அப்துல்லா உசேன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து தாக்குதல் மேற்கொண்டமை நிரூபிக்கப்பட்டதாக கருதிய நீதிபதிகள் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். அத்துடன் அப்துல்லா உசேனை தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் மொசூலில் கைது செய்யப்பட்ட ஏனைய ஐ.எஸ். பயங்கரவாதிகள் மீது வழக்கு விசாரணை நடந்து வருகின்றன.