அண்மையில் அண்மையில் ரீதியாக திறந்து வைக்கபட்டு சகல வசதிகளும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக இயங்கி வருகின்ற ஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவு உட்பட பல பிரிவுகள் தாதியர் போதாமை காரணமாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு 104 தாதியர்கள் தேவையான நிலையில் 60 தாதியர்களே காணப்படுகின்றனர் எனவும் 44 தாதியர்களின் பற்றாக்குறை காணப்பட்டுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையி;ல் நிலமையினை வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் எஸ்.விஜேதுங்க கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர்; சுகாதார அமைச்சர் ராஜித சேனாதிரட்னவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக 40 தாதியர்களுக்கு உடனடியாக நியமனத்தை பெற்றுக் கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 25 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்ககுமாறும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் அனைத்தையும் நிவர்த்தி செய்ய 150 மில்லியன் ரூபா நிதி ஓதுக்கபட்டுள்ளதுடன்; அதன் முதல் கட்டமாக 35 மில்லியன் ரூபா தற்போது வழங்கபட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது