Home உலகம்போலியாக பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பீல்ட் மார்சலின் குடும்பத்திற்கு நட்டஈடு

போலியாக பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பீல்ட் மார்சலின் குடும்பத்திற்கு நட்டஈடு

by admin


குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

பிரித்தானியாவில் போலியாக பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பீல்ட் மார்சல் லோர்ட் பிரமாலின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. பீல்ட் மார்சல் பிரமால் காலமாகியுள்ள நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த நட்டஈட்டுத்தொகையை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சிறுவர் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்டதாக பிரமால் மீது குற்றம் சுமத்தப்பட்ட போதிலும் அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என அண்மையில் நிரூபணமாகியுள்ளது. மெற்றோ பொலிட்டன் காவல்துறையினர் இந்த நட்டஈட்டுத் தொகையை வழங்கியுள்ளனர். எவ்வளவு நட்டஈடு வழங்கப்பட்டது எனக் குறிப்பிடப்படாத போதிலும் சுமார் ஒரு லட்சம்  பவுண்ட்கள் நட்டஈடாக வழங்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More