இலங்கையிலோ இல்லது உலகத்தின் எந்தவொரு இடத்திலுமோ முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதோ அல்லது எந்தவொரு படையினர் மீதோ கைவைப்பதற்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 66 வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்
சங்கீத நாற்காலி போட்டிக்கோ, விநோத போட்டிகளுக்காகவோ தாம் ஒன்றிணைந்த கூட்டு அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவின் பிரச்சினை தொடர்பில் இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி கருத்து இது எமது கடல் எல்லைக்கு அப்பாற்பட்ட பிரச்சினை என்ற போதிலும்; எனது நாட்டினர் மீது எவருக்கும் கைவைக்க அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.