மியான்மாரில் அந்நாட்டு ராணுவத்தினர் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை ஆரம்பித்;து இரு வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து பங்களாதேஸ் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் பலர் தொடர்ந்தும் அங்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸ் எல்லையோரம் உள்ள கிராமங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றதாகவும் அங்கு கடுமையான உணவுப்பற்றாக்குறை நிலவுதாகவும் நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமையும் மேற்கு மியான்மரில் புகை மேலேழும்பி வருவதைப் பார்க்க முடிந்ததாகவும் பற்றி எரியும் கிராமங்களில் இருந்து அப்புகை வந்திருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் ராணுவத்தினர் தங்களைச் சுட்டதுடன், வீடுகளுக்கும் தீ வைத்ததாக அகதிகள் தெரிவித்துள்ளனர்.
அத்தடன் வன்முறைக்குக் காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்படும் ரொஹிஞ்சா முஸ்லிம்களைப் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை மியன்மார் அரசு மறுத்துள்ளது. .