212
நேபாளத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் சித்வான், மக்வான்பூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சுமார் 500 பாடசாலைக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதில் 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைக் கட்டிடங்களில்தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தில் இந்தாண்டில் இதுவரை இயற்கை அனர்த்தங்களனினால் 150 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love