146
சுகாதார மருத்துவ பரிசோதகர்கள், நாடளாவிய ரீதியாக இன்று பொது அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, சங்கத்தின் பொருளாளர் யசஸ் முதலிகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகர சபையில் பணிபுரிந்த சுகாதார மருத்துவ பரிசோதகர்கள் ஐந்து பேரை சுகாதாரத்துறை செயலாளர், தன்னிச்சையாக இடமாற்றம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமது கோரிக்கைக்கு அதிகாரிகள் முறையான தீர்வு வழங்காத பட்சத்தில் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
Spread the love