உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரைத் தொடர்ந்து பரூக்காபாத் அரசு மருத்துவமனையிலும் ஒரு மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோரக்பூரில் உள்ள பிஆர்டி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக ஒரே வாரத்தில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலையில், பரூக்காபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவற்றில் பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படுகின்ற போதிலும் மருத்துவமனையில் ஒக்சிசன் விநியோகம் மற்றும் மருந்துகளை தாமதமாக வழங்கியமை போன்றவையே காரணம் என என்று இறந்த குழந்தைகளின் பெற்றோர் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை பரூக்காபாத் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆகியோரை மாநில அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.