குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரியா மீது தடைகளை விதிப்பதில் பயனில்லை என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். வடகொரியர்கள் புல்லைச் சாப்பிட்டாலும் சாப்பிடுவார்களே தவிர, அணுத் திட்டம் தொடர்பில் இணக்கம் காணமாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா அணு குண்டு ஒன்றை பரிசோதனை செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. ராஜதந்திர அணுகுமுறையே ஒரே தீர்வுத் திட்டம் எனவும், தடைகள் விதிப்பதன் மூலம் பயனில்லை எனவும் விளாடிமிர் புட்டின் சுட்டிக்காட்டியுள்ளார்.