குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வெலிக்கடை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென கபே அமைப்பு கோரியுள்ளது. கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலகம் தொடர்பான பிரதான சாட்சியாளர் சுதேஸ் நன்திமாலின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
வெலிக்கடை சம்பவம் இடம்பெற்று ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அது தொடர்பில் சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குற்றச் செயலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.