பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் டெல்லி மற்றும் காஷ்மீரின் பல்வேறு இடங்களில் இன்று சோதனை நடத்தினர்.
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக காஷ்மீரில் செயற்பட்டு வரும் சில அமைப்புகள் நிதியுதவி மற்றும் தாக்குதலுக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.
இந்நிலையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று காலை டெல்லி மற்றும் காஷ்மீரில் உள்ள 16க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்ரீநகர் மற்றும் வடக்கு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் ஹவாலா முகவரா செயல்பட்டு வருபவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதுடன் டெல்லியிலும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் இதுவரை 7 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.