435
நீட் பரீட்சையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக, இந்திய அரசுகளின் போக்கை கண்டித்து போராட்டங்களும் கருத்தியல் வெளிப்பாடுகளும் நிகழ்த்தப்படுகின்றன. ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்தியல் சித்திரம் தமிழகத்தின், இந்தியாவின் சமூக நீதி வறட்சியை ஆழமாகச் சித்திரிக்கிறது. மரணமடைந்த அனிதாவின் உடலை தந்தை பெயரியார், காமராஜர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் வாரித் தூக்குவதாக அமைந்துள்ள இச் சித்திரம் இன்றைய தமிழகத்தின் நிலையை எடுத்துரைத்து முகத்தில் அறைகிறது.
கருத்தியல் சித்திரம் – ஆனந்தவிகடன்
Spread the love