170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்க அலுவலகங்களில் நேர மாற்றம் அமுல்படுத்தப்பட உள்ளது. எதிர்வரும் 18ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்தரமுல்ல பகுதியில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்களின் பணி நேரமே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சு தகவல்வெளியிட்டுள்ளது.
காலை 7.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரையில் பணி நேரம் அமுல்படுத்தப்பட உள்ளது. பரீட்சார்த்த அடிப்படையில் இந்த திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love