1993-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அபுசலீம், கரிமுல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 713 பேர் காயமடைந்திருந்தனர்.
நிழல் உலக தாதா ராவூத் இப்ராகீம் மேற்பார்வையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த குண்டு வெடிப்பு வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தாவூத் இப்ராகீம் நண்பர்களான அபுசலீம், பெரோஸ் அப்துல் ரசீத்கான், தாகீர் மெர்ச்சன்ட், கரிமுல்லாகான், ரியாஸ் சித்திக் ஆகியோரை குற்றவாளிகள் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவிக்க்பபட்டிருந்த நிலையிலஅவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அபுசலீம், கரி முல்லாகான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அபுசலீமுக்கு 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளிகளான தாகீர் மெர்ச்சன்ட், பெரோஸ்-க்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன் ரியாஸ் சித்திக்குக்கு 10 வருடம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.