குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸில் வங்கிகள் மீது பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்ட சந்தேகத்தி;ன் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வர்த்தகர் ஓருவர் அளித்த தகவல் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெராட் கொலம்ப் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாரிசின் புறநகர் பகுதியொன்றில் உள்ள வீடொன்றை காவல்துறையினர் சோதனையிட்டவேளை வெடிமருந்துகளும் வெடிபொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் தாங்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் இல்லை என தெரிவிக்கின்ற போதிலும் சிரியாவிற்கு அவர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் வெடிமருந்துக்களை பயன்படுத்தி வங்கிகளை தகர்க்க திட்டமிட்டிருந்தனர் நாங்கள் அவர்களிற்கு பயங்கரவாத நோக்கம் இருக்கலாம் என கருதுகி;ன்றோம் அதனடிப்படையில் விசாரணை செய்து வருகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட வகை வெடிபொருள் ஜிகாத் தீவிரவாதிகளாலேயே அதிகம்பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர