நியோர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அர்ஜெண்டினாவின் வீரர் யுவான் மார்டின் டெல் போட்ரோ வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இன்று நடந்த இத்தொடரின் காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரரை எதிர்கொண்ட யுவான் 7-5, 3-6, 7-6, 6-4 என்ற செட்கணக்கில் பெடரரை வீழ்த்தி வெற்றியீட்டியுள்ளார்.
யுவான் முந்தைய போட்டியில் ஆறாம்நிலை வீரரான டோம்னிக் தெயிமை தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தார். யுவான் 2009-ல் நடால், பெடரர் இருவரையும் வீழ்த்தி அமெரிக்க ஓபன் டென்னிஸ் சம்பினானார் என்பது குறிப்பிடத்தக்கது.