குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் மாடிசென் கீஸை (Madison Keys) வீழ்த்தி அதே அதேநாட்டினைச் சேர்ந்த (Sloane Stephen) வெற்றி பெற்றுள்ளார். அரையிறுதியில் முன்னாள் சம்பியனான வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய ஸ்லோனே ஸ்டீபன்ஸ் 61 நிமிடங்களில் சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஸ்லோனே ஸ்டீபன்ஸ் இரண்டாவது செட்டில் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
உபாதைகள் காரணமாக இரண்டு வீராங்கனைகளும் இந்த ஆண்டின் பருவகாலத்தின் முதல் போட்டிகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2002ம் ஆண்டின் பின்னர் இரண்டு அமெரிக்க வீராங்கனைகள் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதியாட்டத்தில் மோதிக் கொண்ட முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஓபன் மகளிர் போட்டியில் இரண்டு அமெரிக்க வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி
Sep 8, 2017 @ 02:44
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் பிரிவில் இரண்டு அமெரிக்க வீராங்கனைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர். அமெரிக்காவின் மாடிசென் கீ (Madison Keys) மற்றும் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (Sloane Stephen) ஆகியோரே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுக் கொண்டுள்ளனர். அரையிறுதிப் போட்டிகளில் அமெரிக்க வீராங்கனைகளே ஒருவரை ஒருவர் எதிர்த்தாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் அரையிறுதிப் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி ஸ்லோனே வெற்றியீட்டியிருந்தார். 6-1 0-6 7-5 என்ற செற் கணக்கில் ஸ்லோனே, வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்தார். இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் கோகோ வண்டிவேகெயை மாடிசென் கீ வீழ்த்தியிருந்தார். 6-1 மற்றும் 6-2 என்ற நேர் செற்களில் மாடிசென் இலகு வெற்றியீட்டியுள்ளார்.
இதன்படி அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனைகளான மாடிசென் கீ மற்றும் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் ஆகியோர் மோத உள்ளனர்.