குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு ஜனாதிபதியிடம் விலகுவது குறித்து அறிவித்திருந்தனர்.
சுசில் பிரேமஜயந்த, நிமால் லன்சா, அனுர பிரியதர்சன யாபா, ரீ.பி. ஏக்கநாயக்க, துலுப் விஜேசேகர, அருந்திக்க பெர்னாண்டோ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இவ்வாறு அரசாங்கத்தை விட்டு விலக உள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது சாத்தியமில்லை என இவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
Add Comment