பாலியல் குற்றச்சாட்டின் பேரில் தண்டணை வித்திக்ப்பட்டுள்ள குர்மீத் ராம் ரகீம் சிங்கின் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சிர்சாவில் பஞ்சாப், அரியானா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் அரச அதிகாரிகள் இன்று சோதனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்மீத் ராம் ரகீம் சிங் இரண்டு பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்று சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட கலவரத்தில் 38-க்கும் மேற்பட்டோர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கலவர சம்பவங்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையிலேயே பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் இன்று காலை அரச அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சோதனையின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக கடுமையாக பாதுக்காப்பு போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளதுடன் சிர்சாவில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.