குளோபல் தமிழ்ச் செய்தியாளர் –
கடந்த மூன்று வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் இருவருக்கு காணாமல் செய்யப்பட்ட தங்களின் உறவுகளில் ஒருவா் தொலைபேசி மூலமும், மற்றொருவா் கடிதம் மூலமும் தொடர்பு கொண்டுள்ளனா் ஆனால் இதுவரை அவா்கள் தொடர்பிலும் எவ்வித தகவலும் இல்லை என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளனா்.
கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை சந்தித்த ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடமே மேற்படி விடயம சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களில் இருவருக்கு தங்களின் காணாமல் செய்யப்பட்ட உறவுகள் தொலைபேசி மூலமும், கடிதம் தொடர்பு கொண்டுள்ளனா் எனவே காணாமல் செய்யப்பட்டவா்களில் பல இன்னும் எங்கோ இருக்கின்றாா்கள் என்றே நாம் உறுதியாக நம்புகின்றோம், அதற்கு இது ஒரு ஆதாரம், எனவே இவ்வாறான விடயம் தொடர்பில் நீங்கள் (ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்) கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்
யுத்தத்திற்கு பின்னர் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவா்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பதிவுக்கு உட்பட்டவா்கள், தடுப்பு முகாம் ஒன்றில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டவா்கள் என பலபேர் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் பட்டியலில் உள்ளனா் என்பதை சுட்டிக்காட்டிய உறவினா்கள் ஜரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் அரசுக்கு இவ்விடயங்கள் தொடர்பில் கடுமையான அழுதத்தை கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனா்.
அத்தோடு ஜிபிஎஸ் வரிச் சலுகை வழங்க்கப்பட்டமை, ஜநாவில் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டமைக்கும் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் தங்களின் ஆட்சேபனையையும் தெரிவித்தனர்.