153
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹூ( Benjamin Netanyahu ) வின் பாரியார் சாரா நெட்டன்யாஹூ (Sarah Netanyahu) மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பில் சாரா மீது வழக்குத் தொடரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஓரு லட்சம் அமெரிக்க டொலர் பொதுப் பணத்தை மோசடி செய்துள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் தமது பாரியார் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என பிரதமர் பென்ஜிமின் நெட்டன்யாஹூ தெரிவித்துள்ளார். அரசியல் எதிரிகள் இவ்வாறு பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love