151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையில் வாகன விபத்துக்களில் சுமார் 1800 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 1708 விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களில் அதிகளவில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களும் பாதசாரிகளுமே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்தக் காலப்பகுதியில் 233 முச்சக்கர வண்டி விபத்துக்களில் 241 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை நாள் தோறும் வீதி விபத்தில் எட்டு பேர் வரையில் உயிரிழப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love