கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்தச் சட்டம், இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 25 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவைத் தலைவர் தந்திரதாஸ கலபதி தலைமையில் மாகாண சபை இன்று காலை 9.30 க்கு கூடியது. அதன் போது அவையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகியில்லாத காரணத்தால் மீண்டும் சபை 11.30 ஒத்திவைக்கப்பட்டது.
11.30 க்கும் ஆளும்கட்சி உறுப்பினர்களின் பிரசன்னமின்மை காரணமாக சபை நடவடிக்கை மீண்டும் மதியம் 1.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் ஒரு மணிக்கு சபை கூடிய போது பெரும் அமளி துமளியுடன் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் குறித்த சட்ட மூலம் சபையில் நிறைவேறியதும் சபை நடவடிக்கை முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.
20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 24 உறுப்பினர்களும் எதிராக 08 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதுடன், ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.