குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் வடகொரியாவினால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதாவது ஏற்பட்டால் அவுஸ்திரேலியா தனது முழுமையான உதவியை வழங்கும் என தென்கொரிய ஜனாதிபதிக்கு உறுதியளித்துள்ளார் அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புல் இன்று திங்கட்கிழமை தென்கொரிய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடலி;ன் போது வடகொரியாவிற்கு எதிரான தடைகளிற்கு அவுஸ்திரேலியா வழங்கிவரும் ஆதரவிற்காக தென்கொரிய ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார். வடகொரிய அரசாங்கத்தை தனிமைப்படுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தடைகள் அவசியமானவை என இரு தலைவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.தடைகள் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படுவதற்கு சீனாவும் ரஸ்யாவும் முக்கிய பங்களிப்பை ஆற்றவேண்டும் எனவும் அவர்கள் இணங்கியுள்ளனர்.