குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடியை மூடி மறைப்பதற்கு சில் துணி வழக்கினை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டுள்ளது என தேசிய பிக்குகள் முன்னணியின் செயலாளர் வகாமுல்லே உதித்த தேரர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் அனுச பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக தண்டனை விதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தண்டனையானது பொதுமக்களுக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தண்டனை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி வேறு விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.