Home இலங்கைமஹிந்த ராஜபக்ஸ பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ஹரிசன்

மஹிந்த ராஜபக்ஸ பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – ஹரிசன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பொதுமக்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோர வேண்டுமென கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்துள்ளார். 2015ம் ஆண்டு தேர்தல்களின் போது மஹிந்த மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பாரியளவில் பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்துள்ளதாகத்  தெரிவித்துள்ளார்.

பாரியளவில் பிரச்சாரத்திற்காக பஸ்களை பயன்படுத்தியும், அலரி மாளிகையில் விருந்துபசாரங்களை வழங்கியும் பாரியளவில் அரச சொத்துக்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்த தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More