குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பிலான சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்றில் முதல்முறையாக நிறைவேற்றப்பாட்டுள்ளது. இதனையடுத்து பிரெக்சிற் தொடர்பான சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.
இன்றையதினம் பாராளுமன்றில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாசிப்பைத் தொடர்ந்து அரசியல், நிதி மற்றும் சட்ட உறவுகள் தொடர்பான சட்டமூலத்துக்கு ஆதரவாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். இதன்மூலம்; அடுத்த கட்டத்துக்கு நகர்வதற்கான வழியேற்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது.
அதேவேளை நேற்றையதினம் இடம்பெற்ற பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான சட்டமூலத்துக்கு 326 முதல் 290 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா உத்தியோகபூர்வமாக விலகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.